(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

சீனிக்கான இறக்குமதி வரி மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக மக்கள் பாவனைக்கான சீனி விலை அதிகரிக்கப்படமாட்டாது. நுகர்வோருக்கான சீனியை அதிகரிக்க வேண்டாம் என்றே சீனி இறக்குமதியாளர் சங்கத்திடம் கோரியுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர சபையில் தெரிவித்தார்.

ரூபாவின் பெறுமதி வீழச்சி அடைந்தமையை எடுத்து காட்டி நாடு பாரிய பொருளாதார பின்னடவை சந்தித்துள்ளதாக எதிரணியினர் மக்களுக்கு காண்பிக்க முனைகின்றனர். அந்திய செலாவணியை சந்தைக்கு விடவதிலும் பார்க்க இந்த வருடத்தில் கடன் செலுத்தியதை போன்று அடுத்த வருடத்தில் 4.5 பில்லியன் டொலர் கடன் செலுத்துவதே எமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் பத்ம உதயசாந்த குணசேகர எம்.பியின் மேலதிக கேள்விக்கு பதிலளிக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அத்துடன் முன்னைய ஆட்சியின் போது இலாபமற்ற அபிவிருத்தி திட்டங்களை எடுத்து காட்டிய பாரியளவி்ல கடன் பெற்றனர். இந்த கடன் சுமை எம்மீதே திணிக்கப்பட்டுள்ளது . எனினும் இந்த வருடத்தின் காலாண்டில் 3.7 வீத பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளோம். கடந்த வருடத்தின் போது 3.1 வீதமாகவே இருந்தது என்றார்.