(எம்.சி.நஜிமுதீன்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு அந்நாட்டுடன் மீண்டும் நட்புறவை ஏற்படுத்தியுள்ளார். எனவே இந்து லங்கா திட்டத்தை எதிர்காலத்திலும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலேயே முன்னெடுக்க முடியும் என்பது அவ்விஜயத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர்களை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை தொடர்பான விசாரணை நடவடிக்கைகளிலிருந்து பொலிஸ் மா அதிபரை நீக்க வேண்டும். 

அப்போதுதான் உரிய விசாரணைகளை முன்னெடுக்க இயலும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.