(இராஜதுரை ஹஷான்)

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா விடுதலைப் புலிகளின்  இயக்கத்துடன் தொடர்புடையவர் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா ஒரு புறம்  பாதள குழுவினரது தொடர்பும் மறுபுறம்  பொலிஸ் ஆணைக்குழுவின் பலமும் கொண்டவர். ஆகவே இவரது விடயத்தில் அரசாங்கம் அசமந்தமாக செயற்படாமல் இவரை கைதுசெய்து சுயாதீனமாக விசாரனைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டம் தீட்டயுள்ளதாக பொலிஸ் பிரிவின் முக்கிய தரப்பினரே தகுந்த ஆதாரத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார் . 

இது ஆட்சி கவிழ்ப்பு மற்றும் புது ஆட்சி தோன்றுவதை தடுக்கும் சூழ்ச்சியாகவே காணப்படுகின்றது எனவும் தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.