(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)                                                                                                                                                                        காணி விடுவிப்பில் இழுத்தடிப்பு , பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிப்பு உட்பட தமிழ் மக்கள் நெடுநாட்களாகவே எதிர்நோக்கிவரும் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கோரிக்கை விடுத்தார். தம்மை விடுவிக்குமாறுகோரி உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நல்லெண்ணத்தின் அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற துறைமுகம் மற்றும் விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டுச்சட்டம் மற்றும் மதுவரி கட்டளைச்சட்டத்தின்கீழான அறிவிப்புகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இக் கோரிக்கையை விடுத்தார்.