பங்களாதேஷ் அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதி லீக் போட்டி அபுதாபியில் இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஆப்கான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானினத்தார்.

அதற்கிணங்க ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கவுள்ளது.

6 நான்கு பங்கு கொண்ட 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் வெளியேற, 'சுப்பர்- 4' சுற்றுக்குள் குழு “ஏ” யில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் குழு “பி” யில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளும் நுழைந்தன.

இந் நிலையில் நாளை ஆரம்பமாகவுள்ள 'சுப்பர்- 4' சுற்றில் மொத்தம் 6 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் நான்கு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

அதன்படி நாளை 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 'சுப்பர்- 4' சுற்றின் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா, பங்களாதேஷ் அணியையும் (துபாய்) பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணியையும் (அபுதாபி) எதிர்கொள்கிறது.

எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள 'சுப்பர் -4' சுற்றின் மூன்று, நான்காவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியையும் (துபாய்), ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணியையும் (அபுதாபி) எதிர்கொள்கிறது.

எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள 'சுப்பர் -4' சுற்றின் ஐந்தாவது போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணியை (துபாய்) எதிர்கொள்கிறது. எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள 'சுப்பர்- 4' சுற்றின் ஆறாவதும் இறுதியுமான போட்டியில் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணியை (அபுதாபி) எதிர்கொள்கிறது.

'சுப்பர் -4' சுற்றில் முதல் இரண்டு இடங்களையும் பிடிக்கும் அணி எதிர்வரும் 28 ஆம் திகதி துபாயில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.