பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மீது வழக்கு தொடர வேண்டும் என்ற கருத்து தொடர்பில் சபாநாயகருடன் கருத்து பகிர உள்ளேன். அவர் பொறுப்பு வாய்ந்த அமைச்சு பதவியில் இருந்தபோது, அவரும் ஓர் பெண் என்பதால் உணர்வுகளை கட்டுப்படுத்தாது அவர் அவ்வாறானதொரு கருத்தை முன்வைத்தார். என பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இன்று காலை கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றால், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழரசு கட்சி விடுதலை புலிகளை ஆதரிப்பதாகவும், அவ்வமைப்பின் செயற்பாடுகளுக்கு முழுமையாக ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்த கருத்து தொடர்பிலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த தேர்தல் விஞஞாபனத்தின் மூலம் 22 பேர் பாராளுமன்றம் சென்றார்கள், அவர்கள் எதை சாதித்தார்கள். 

இன்று சமஸ்டி தொடர்பில் பேசுகின்றார்கள். ரணில் விக்ரமசிங்க தனது தேர்தலில் சமஸ்டியை முன்வைத்து போட்டியிட்டார். அப்புாதைய காலத்தில் பல்வேறு தரப்பினரிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு வாக்களிக்க வேண்டாம் என கூறினர். 

அவ்வாறு இருந்த போது 49 வீதமான மக்கள் சமஸ்டிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதேவேளை ஒரு தேர்தலில் இறுதி யுத்தத்தின்போது போர் புரிந்த படை அதிகாரி ஒருவருக்கு வாக்களிக்குமாறு கூறியிருந்தார்கள். என சரத் பொன்சேகா தொடர்பிலும் அவர் கரு்தது தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பிரபாகரன் ஓர் சிறந்த மனிதர் எனவும் குறிப்பிட்ட அவர், தமிழ் தலைமைகளுடன் ஒப்பிடுகையில் அவர் ஓர் சிறந்த தலைவர் எனவும் குறிப்பிட்டார். இக்காலகட்டத்தில் அனைவரும் சுகபோக வாழ்க்கைக்காக அரசியல் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சுமந்திரன் 3 மாதங்கள் அமெரிக்கா சென்றிருந்த விடயம் தொடர்பிலும் அவர் கரு்தது தெரிவித்தார்.