இலங்கை தேசிய கராத்தே தெரிவுக்குழு உறுப்பினராக சென்செய். அன்ரோ டினேஸ் விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐவர் கொண்ட இந்த தெரிவுக்குழுவில் தலைவராக  சென்செய். ரி.என். கே. பெரேரா, நியமிக்கப்பட்டுள்ளதுடன் குழுவின் உறுப்பினர்களாக சென்செய்.அன்ரோ டினேஸ், சென்செய். டபிள்யூ. கே. ஏ. யு.கீர்த்தி, சென்செய். சி. சமரசேகர, சென்செய். ஏ. எஸ். ஹெட்டிஆராச்சி ஆகியோர் இலங்கை தேசிய கராத்தே சம்மேளனத்தினால் சிபாரிசு செய்யப்பட்டு விளையாட்டுத் துறை அமைச்சினால் நியமனம் பெற்றுள்ளனர். 

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாடுகளில் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் பங்குபெறும் தேசிய வீரர்களை தெரிவுசெய்யும் கடமை இவர்களுக்குரியதென்பது குறிப்பிடத்தக்கது.