மோசமான துடுப்பாட்டம் காரணமாகவே இந்திய அணிக்கு எதிரான தொடரில் பாக்கிஸ்தான் தோல்வியடைந்தது என  அணியின் தலைவர் சப்பிராஸ் அகமட் தெரிவித்துள்ளார்

ஆசிய கிண்ணத்திற்கான தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில்  பாக்கிஸ்தான் எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

தொடரின் ஆரம்பத்திலேயே இவ்வாறான தோல்வி ஏற்பட்டது நல்லது,நாங்கள் மீண்டும் இதே தவறுகளையிழைக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் சிறப்பானதாக அமையவில்லை நாங்கள் முதல் ஐந்து ஓவர்களிற்குள் இரண்டு விக்கெட்களை இழந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஓரளவு சிறப்பாக விளையாடினோம் ஆனால் மீண்டும் விக்கெட்களை இழந்தோம் இதன் காரணமாக எங்களால் மீள முடியவில்லை எனவும் பாக்கிஸ்தான் அணித்தலைவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மிக மோசமாக விளையாடினோம் அனைவரும் மோசமான சொட்களை விளையாடினோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாபரை தவிர அனைவரும் இலகுவாக விக்கெட்களை இழந்தோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதற்கே தயாராகயிருந்தோம் ஆனால் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் கேதார் யாதவ் விக்கெட்களை வீழ்த்தினார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.