அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ள காணிப் பிரசசினைகளுக்கு காத்திரமான தீர்வொன்றை துரிதமாக வழங்க வேண்டுமென அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயகவிடம் அம்பாறை மாவட்ட காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்து.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து வரும் காணிப்பிரச்சனைகள் தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை நேற்று மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபேதே இவ்வமைப்பு மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான காணி அனுமதிப் பத்திரம் இருக்கின்ற சுமார் 3000 ஏக்கர் காணிகளில் இராணுவம் மற்றும் வன இலாகா திணைக்களம் ஆகியவற்றின் பிடியின் கீழ் இருந்து வருவதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொத்துவில் மற்றும் திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவிகளில் பாலையடி வட்டை 503 ஏக்கரும், கிரான்குளம் 885 ஏக்கரும், அஸ்ரப்நகர் 150 ஏக்கரும், பொன்னான்வெளியில் 600 ஏக்கரும், அம்பலத்தாறு 144 ஏக்கரும், கீத்துப்பத்துவில் 96 ஏக்கரும், பாலமுனையில் 15 ஏக்கரும் விடுவிக்கப்படாமல் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வெற்றுக்காணிகளில் பயிர்சசெய்கையை மேற்கொள்ளும் கொள்கைக்கமைய தமது காணிகளில் பயிர்சசெயகையை மேற்கொண்டு தமது ஜீவனோபாயத்தை முன்னெடுப்தற்கு அரசாங்க அதிகாரிகள் முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுரச்சோவை 500 வீட்டுத்திடத்தையும் அரசாங்கம் தடைசெய்து தற்போது அவ்வீடுகள் இறந்து விறகாகும் நிலையில் காணப்படுகின்றது.

இதேவேளை பொத்துவில் கனகர்  கிராம மக்கள் தமது காணி மீட்புக் கோரிக்கையை கடந்த ஒரு மாதகாலமாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். இதனை அரசாங்கமோ அல்லது அதிகாரிகளோ கவனம்கொளடளாமல் இருந்து வருவது வேதனைக்குரிய விடயமெனவும் எடுத்துக் கூறினர்.

இதற்கு சாதகமான தீர்வொன்றினை மிகவிரையில் பெற்றுத்தருவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பண்டாரநாயக இக்குழுவினருக்கு உறுதியளித்தார்.