பிரித்­தா­னிய சாலிஸ்­பரி பிராந்­தி­யத்­தி­லுள்ள உண­வ­க­மொன்றில் உண­வ­ருந்திக் கொண்­டி­ருந்த வேளை சுக­வீ­ன­ம­டைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய மொடல் அழ­கி­யொ­ருவர், ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டினே தன்னை எலி நஞ்சின் மூலம் கொல்ல முயற்­சித்­த­தாக குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

அன்னா ஷப்­பிரோ (30 வயது) என்ற மேற்­படி மொடல் அழ­கியும் அவ­ரது கணவர் அலெக்ஸ் கிங்கும் (42 வயது) கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை உண­வ­க­மொன்றில் உண­வ­ருந்திக்கொண்­டி­ருந்த வேளை கடும் சுக­வீ­ன­ம­டைந்­தனர்.

இதன்­போது அலெக்ஸ் கிங் வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்­துள்ளார். இத­னை­ய­டுத்து வைத்தியசாலைக்கு கொண்டு  செல்­லப்­பட்ட மேற்­படி ஜோடியை பரி­சோ­தித்த வைத்தியர்கள் அவர்கள் மீது  எலி நஞ்சைப் பயன்­ப­டுத்தி தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக நம்­பு­வ­தாக தெரி­விக்­கின்­றனர். இந்­நி­லையில் விளா­டிமிர் புட்­டினே தம்மை இலக்­கு­வைத்துத் தாக்­குதல் நடத்­தி­ய­தாக அன்னா ஷப்­பிரோ குற்­றஞ்­சாட்­டு­கிறார்.

இந்த சம்­ப­வத்­தை­ய­டுத்து சாலிஸ்­பரி பிராந்­திய வீதிகள் மூடப்­பட்டு தீவிர தேடுதல் நடத்­தப்­பட்­டது. ரஷ்­யாவில் பிறந்த அன்னா ஷப்­பிரோ, 2008 ஆம் ஆண்டில் தனது குடும்­பத்­தி­னரின் விருப்­பத்­திற்கு மாறாக இஸ்­ரே­லிய பிர­ஜை­யாக மாறினார். 

2008 ஆம் ஆண்டு லண்­ட­னுக்குச் சென்ற அவர், அலெக்ஸ் கிங்கை சந்­தித்துக் காதல் கொண்டார்.  அதன் பின்னர் அவர்கள் கடந்த மாதமே திரு­மண பந்­தத்தில் இணைந்­தனர்.

இந்­நி­லையில் ரஷ்ய புல­னாய்வுப் பிரி­வா­னது தன்னை ஒரு உள­வா­ளி­யாகக் கருதி வரு­வ­தாக அன்னா ஷப்­பிரோ கூறுகிறார்.