ஆவா குழுவை 2 நாட்களுக்குள் அடக்குவோம் ; சட்டத்தை மதித்தே பொறுமை காக்கின்றோம் - யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி 

Published By: Daya

20 Sep, 2018 | 02:37 PM
image

ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ,

நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பன பொலிஸாரிடம் உள்ளன. அதனால் அவற்றில் நாம் தலையிடுவதில்லை. 

யாழில் உள்ள ஆவா குழு போன்ற கோஸ்டிகளை அடக்குவது எமக்கு பெரிய சவால் இல்லை இரண்டு நாளுக்குள் அடக்கி விடுவோம். 

பொலிஸாரினால் அவர்களை அடக்க முடியாது என இராணுவத்தின் உதவியை நாடினால் உதவ நாம் தயாராக உள்ளோம்.

தற்போதைய சூழ்நிலையில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களை இராணுவத்தினர் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தால், இராணுவம் தமிழ் இளைஞர்களை கைது செய்கிறார்கள் என இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள். அதனால் பொறுமையாக இருக்கின்றோம்.

அதற்காக தொடர்ந்து இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை நாம் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதியிடம் யாழில் நடக்கும் வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும். அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10