இறுதிப்போரில் இலங்கை வெற்றிபெறுவதற்கு இந்தியா உதவியதாக  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கவேண்டும் என பா.ஜ.க.வின் தமிழக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறுதிப்போரில் இந்தியா உதவி புரிந்தது என மஹிந்தராஜபக்ஷ பகிரங்கமாக தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தி.மு.க.வும் ம.தி.மு.கவும் இன்று வெண்சாமரம் வீசுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தராஜபக்ஷவின் இந்த கருத்திற்கு தி.மு.க. பதில் அளிக்காமல் மௌனம் காக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.