கிளிநொச்சி அக்காரான் பிரதேச வைத்தியசாலையின் பெண் பணியாளர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு காப்பாற்ப்பட்டுள்ளார்.

சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் வைத்தியசாலையில் கடமை நேரத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன் போது உடனடியாக செயற்பட்ட ஏனைய பணியாளர்கள் அவரை காப்பாற்றி அவசர அம்புலன்ஸ் வண்டி மூலம் கிளிநொச்சி மாட்ட வைத்தியசாலைக்கு  அனுப்பபட்டு சிகிசை பெற்று வருகின்றார்.

பணியின் நிமிர்த்தம்  ஏற்பட்ட விரக்தியின் காரணமாக கடந்த சில நாட்களாக மனச் சோர்வுக்குட்பட்டிருந்த நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக சக பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.