"நல்லாட்சியில் 11 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளது"

Published By: Vishnu

20 Sep, 2018 | 01:38 PM
image

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக மட்டு. மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள நரசிங்க ஆலயத்தின் விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்ட வியாழேந்திரன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவத்த அவர்,

ஆலயத்தின் சிலைகள் காட்டுமிராண்டித்தனமாக உடைக்கப்பட்டுள்ளது. இந்த நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

குருக்கள்மடம், வாகனேரி, பாலையடிதோனா, வாழைச்சேனை, ஆரையம்பதி ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களே அதிகளவாக இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது. 

இந்த நாட்டில் நல்லிணக்கம் என்று பேசிக்குகொண்டு அதனை குழப்பும் வகையில் சிலர் செயற்பட்டுவருகின்றனர்.நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும்  செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே இவ்வாறான  சம்பவங்களை மேற்கொள்ளும் விசமிகளை கைதுசெய்ய பொலிஸார் பாராபட்சம் பார்க்காது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31