இலங்கை அணியை சிக்கலில் இருந்து ரசிகர்களாகிய நாம் முன்னோக்கிக்கொண்டு செல்வதற்கு தேவையான தீர்வுகளை ஆராய வேண்டுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான மஹேல ஜெயவர்தன டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இடம்பெற்றுவரும் ஆசியக் கிண்ணத் தொடர்ரில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடமும் ஆப்கானிஸ்தான் அணியிடமும் படு மோசமாக தோல்வியடைந்தது.

இந்நிலையில் இலங்கை அணி மீதும் வீரர்கள் மீதும் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மிக மோசமாக விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திரவீரருமான மஹேல ஜெயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மஹேலவின் டுவிட்டரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கை அணி ரசிகர்களின் ஏமாற்றத்தை நான் புரிந்துகொள்கின்றேன். அந்த ஏமாற்றமடைந்த ரசிகர்களுள் நானும் ஒருவன். 

சமூகவலைத்தளங்களில் இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக வெளிவரும் பல விமர்சனங்களை காணக்கூடியதாகவுள்ளது.

உண்மையில் வீரர்கள் வெறுக்கத்தக்கவிதமாகவே விளையாடினார்கள்.  ஆனாலும் இது விளையாட்டு என்பதால் அவர்கள் மீது தனிப்பட்ட விமர்சனங்களை வைக்க முடியாது.

இதேவேளை, இலங்கை அணியை இவ்வாறான சிக்கலில் இருந்து நாம் முன்நோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான தீர்வுகளை ஆராய்ந்து வீரர்கள் வெற்றிக்காக கடினமாக உழைக்க ஊக்கப்படுத்த வேண்டும்.” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.