யாழில் சர்வதேச திரைப்பட விழா

Published By: Daya

20 Sep, 2018 | 12:32 PM
image

யாழில் 4ஆவது வருடமாக, யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டும் ஒக்ரோபர் 03ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் நோக்கம் சுயாதீன திரைப்படக் கலையை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதாகும். முப்பது வருட யுத்த இழப்புகளிலிருந்து மீளெழும் ஒரு முயற்சியாகவும் இது அமைகிறது.

நிகழ்வு ஒக்டோபர் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள மஜஸ்டிக் திரையரங்கில் மாலை 5.45 மணிக்கு ஆரம்பித்து, விருதுகள் வழங்கும் நிகழ்வு அதே திரையரங்கில் ஒக்டோபர் 8ஆம் திகதி மாலை 6.15 மணிக்கு இடம்பெறும்.

விழாவின் ஆரம்பத் திரைப்படமாக, ‘த யங் கார்ல் மார்க்ஸ்’ (இயக்குனர் ஜேர்மனியைச் சேர்ந்த ரவூல் பெக் – (2017Æ18)), முடிவுநாள் திரைப்படமாக ‘சுவீற் கன்றி’ (இயக்குனர் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ‘வாரிக் தோன்ரன்’ (2017 Æ 113)) ஆகியன திரையிடப்படுகின்றன.

மூத்த தலைமுறைக் கலைஞர்களைப் பாராட்டி கௌரவிக்கவும், இளம் தலைமுறை திரைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கவும் இவ்விழாவில் – வாழ்நாள் சாதனையாளர், சிறந்த முழுநீள அறிமுகத் திரைப்படம், மிகச் சிறந்த சர்வதேச குறுந்திரைப்படம், சிறந்த இலங்கை குறுந் திரைப்படம், மிகச் சிறந்த ஜனரஞ்சகத் திரைப்படத்துக்கான பார்வையாளர் விருது என 05 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இவ்விழாவின் பிரதான அரங்குகளாக மஜெஸ்டிக் கொம்ப்ளெக்ஸ் – கார்கில்ஸ் சதுக்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கம்; மற்றும் யாழ். நூலகக் கேட்போர் கூடம் ஆகியன அமையவுள்ளன. தொடர்புடைய ஏனைய நிகழ்வுகள் பிரித்தானிய கவுன்ஸிலிலும், அமெரிக்கன் கோர்னரிலும் இடம்பெறும்.

விழாவினை நடத்த உதவும் ஏனைய பங்காளிகளாக – அரசாங்கத் திரைப்படப் பிரிவு, திண்ணை ஹோட்டல்ஸ், ஆண்ட்ரூ டிரவல்ஸ் கொம்பனி, யாழ். ஊடக அமையம், சூரியன் எவ். எம்., கோதே இன்ஸ்ரியூட், கிரைசலீஸ் மற்றும் ஜி.ஐ. சட் ஆகியவை அமைகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வைகாசிப்...

2024-05-20 18:55:36
news-image

"புத்த ரஷ்மி" தேசிய வெசாக் பண்டிகையுடன்...

2024-05-20 18:25:20
news-image

நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய...

2024-05-20 16:35:18
news-image

மன்னார் - திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண...

2024-05-20 13:01:12
news-image

"மகளிர் மட்டும்" நிகழ்வு 

2024-05-19 22:35:24
news-image

கொழும்பில் 'பெருந்தோட்ட சமூகத்தின் கனவுகள்' எனும்...

2024-05-19 21:53:01
news-image

நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய...

2024-05-19 16:23:48
news-image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் “கச்சேரி மேளா -...

2024-05-19 13:21:24
news-image

கொழும்பு வான்சாகசம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி...

2024-05-19 11:07:36
news-image

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவன (ATI)...

2024-05-17 18:50:17
news-image

சிங்கப்பூர் கலாமஞ்சரியின் பாரதிதாசன் பாடல்கள் நிறைந்த...

2024-05-17 16:46:27
news-image

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம், கலசங்கள், உற்சவ...

2024-05-17 12:52:25