கிழக்கு மாகாண மக்களின் முன்னேற்றத்துக்காக  ஒரு மாதத்திற்கு 1400 மில்லியன் ரூபாவை செலவு செய்கின்றோம். அதேவேளை அதற்கான எல்லாவகையான திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் எனவே அமைச்சர்கள் அதிகாரிகள் மக்கள் ஆதரவு வழங்கவேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். 

மட்டக்களப்பு கரடியனாறு விவசாய போதனா திணைக்களத்தில் கிழக்கு மாகாண  விவசாய கண்காட்சி நேற்று இடம்பெற்றது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியை  ஆரம்பித்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம ஊரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார் 

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

கிழக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றும் 600 பேர் கொண்ட பெயர்பட்டியல் கிடைத்துள்ளது. 

அதேவேளை மாகாணத்தில் 22 ஆயித்துக்கு மேல் ஆசிரியர்கள் உட்பட  40 ஆயிரம் பேருக்கு மேல் அரச துறையில்  கடமையாற்றிவருகின்றனர். இவர்களுக்கு மாதாந்தம் 17 ஆயிம் மில்லியன் ரூபா சம்பளமாக வழங்குகின்றோம். இருந்தபோதும் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக விவசாயத்துறைக்கு சேவை செய்ய அதிகமானவர்களை புதிதாக நியமிப்பேன். 

கால்நடை மருத்துவத்திற்கு அதிகமானவர்களை புதிதாக நியமித்தேன் இருந்தபோதும் விலங்கு வேளாண்மையை முன்னெடுக்கவேண்டும் இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் விவசாயதுறையை முன்னெடுத்துவருகின்றேன். எனவே அனைத்து அமைச்சர்கள் அதிகாரிகள் மக்கள் என எல்லோரும் இந்த கிழக்கு மக்களின் முன்னேற்றத்துக்கு செய்துவரும் செயற்பாட்டிற்கு அதரவு வழங்கவேண்டும் என்றார்.