கொழும்பில் பிரபல நகை கடையொன்றில் வேலை செய்து வந்த யுவதி ஒருவர் கடந்த 8 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக கொழும்பில் உள்ள பிரபல நகை கடையில் வேலை செய்து வந்த லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய வீரமுத்து சகுந்தலா என்ற யுவதி காணாமல் போய் நான்கு நாட்கள் நிறைவடைகின்ற போதும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என காணாமல் போன யுவதியின் தந்தை வீரமுத்து  தெரிவித்துள்ளார்.

ஆமர்வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த குறித்த பெண் கடந்து 8 ஆம் திகதி  வேலைக்குச் சென்று  மாலையாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவருடைய தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்ட போதும் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதனையடுத்து லிந்துலை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ள போதும் பொலிஸார் கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.

எனவே எனது மகள் தொடர்பில் யாருக்கும் தகவல் தெரியுமாயின் 0717333730 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுகொண்டுள்ளார்.