இந்திய தமிழகத்தின் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொழும்பு பம்பலப்பிட்டிய இந்து கல்லூரிக்கு நேற்றைய தினம் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 

இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த தமிழகத்தின் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொழும்பு பம்பலப்பிட்டிய இந்து கல்லூரிக்கு விஜயம் நேற்றைய தினம் மேற்கொண்டிருந்தார்.

இதனை தொடர்ந்து இலங்கையில் பாடசாலைகளின் நடவடிக்கைகளை பார்வையிட்டார் தொடர்ந்து இவர் கௌரவிக்கபட்டு நினைவு சின்னம் வழங்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கபட்டனர்.

 இவருடன் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஷ்னண் தமிழக கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள்.