யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், கொடிகாமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த உழவியந்திரத்தினை யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் முந்திச்செல்ல முற்பட்டவேளை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர்.

கொடிகாமம் கோயிலாமனைக்கும்  இராமாவில் ஆலயத்திற்கும் இடைப்பட்ட ஏ-9பிரதான வீதியிலேற்பட்ட இவ்விபத்தில் மீசாலை வடக்கைச் சோ்ந்த 27வயதான நபர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.

இவ்வாறு காயம் அடைந்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டுள்ளனா்.