சிதைக்கப்பட்டதாக கூறப்பட்ட தொல்லியல் சின்னங்கள் குறித்து ஆராய விசேட குழு

Published By: Digital Desk 4

19 Sep, 2018 | 09:53 PM
image

கிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய நேற்று  விசேட தொல்லியல் குழு ஆய்வில் ஈடுபட்டது 

நேற்று பகல் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட குழுவினர் கிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய நேற்று விசேட தொல்லியல் குழு ஆய்வில் ஈடுபட்டது. 

வவுனியா தொல்லியல் திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறித்த பகுதியில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது, 

கடந்த 16 ஆம் திகதியன்று கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டிருந்த சிறு வீதி வளைவு உடைக்கப்பட்டமை தொடர்பில் தென்னிலங்கையில் தொல்பியல் மரபு சின்னங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக பொய்யான செய்திகள் பரப்பப்பட்டன.

குறித்த பகுதியில் 2010 ஆம் ஆண்டளவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சமாதானத்திற்கான நினைவு தூபியின் மேலதிக அழகுபடுத்தலுக்காக புராதன கற்றகள் போன்று வடிவமைக்கப்பட்ட கற்களால் வீதி சிறு வளைவுகளுடன் நான்கு பக்கங்களிலும் அமைக்கப்பட்டது. 

குறித்த வளைவுகளில் நகர திட்டமிடல் அதிகார சபையினால் பூங்கா அமைப்பதற்காக ஒரு பகுதியிலும், மற்றய பகுதியில் கிளிநொச்சி பொது சந்தை அமைப்பதற்காகவும் ஏற்கனவே அகற்றப்பட்டிருந்த நிலையில், கடந்த 16 ம் திகதி மற்றய பகுதியில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வந்த பகுதியில் வடிகால் ஒன்றை அமைப்பதற்கு அகற்றப்பட்டது.

குறித்த பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் சிறிதரன் எம்.பியும் அவ்விடத்தில் பிரசன்னமாகியிருந்தார். இந்நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கையில் செய்திகள் வெளியாகியிருந்தன. 

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உண்மைநிலையை ஆராய குறித்த பகுதிக்கு விசேட குழு வருகை தந்திருந்தது. அவ்விடத்தில் குறிப்பிட்ட தொல்பொருள் சிதைக்கப்பட்டதாக கூறப்படும் உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51