சுகாதாரப் பராமரிப்புத் தொழிற்துறையில் உடனடி தீர்வுகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் ஒரு நிறுவனமான Technomedics, இலங்கையில் முதன்முறையாக தூக்க தகவல் மையம் ஒன்றின் மீது முதலீடு செய்துள்ளது. 

இல. 1083, பன்னிப்பிட்டிய வீதி, பத்தரமுல்லை என்ற முகவரியில் அமைந்துள்ள DREAMS Sleep Centre, கடந்த 25 ஆண்டுகளாக தூக்க தீர்வுகளை வழங்குவதில் உலகளாவில் முன்னிலை வகித்துவருகின்ற ResMed Australia (resmed.com) இன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் கூட்டிணைவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

வைபவரீதியாக இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் நிதியமைச்சரான கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், பிரபலமான மார்பு சிகிச்சை வைத்திய நிபுணர்கள், காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், தூக்க தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் ஏனைய மருத்துவத்துறை சார் தொழில் வல்லுனர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். 

தூக்கம் தொடர்பான வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தூக்கத்திற்கான பயிற்சி, உரிய சிகிச்சை தொடர்பான வழிகாட்டல் மற்றும் கிடைக்கப்பெறுகின்ற சிகிச்சை வழிமுறைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவதை DREAMS Sleep Centre தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. தூக்கத்தின் போது மூச்சுத்திணறல் ஏற்படும் வியாதியைக் கண்டறிவதன் முதற்படியாக வீட்டில் எவ்வாறு தூங்குகின்றனர் என்பது தொடர்பான ஆய்வு கற்கையொன்றை இந்த மையம் முன்னெடுக்கும். மேலும் மருத்துவர்களின் பரிந்துரைக்காக தூக்க தரவு ஆராய்ச்சி மற்றும் தூக்க தரவு பகுப்பாய்வு மூலமாக அவற்றை மேம்படுத்துவதற்கும் இந்த மையம் அணுசரணையளிக்கும்.   

Technomedics இன் முகாமைத்துவப் பணிப்பாளரான சுஜித் சமரதிவாகர அவர்கள் சுட்டிக்காட்டுகையில்,

 “இலங்கை சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தூக்கம் தொடர்புபட்ட வியாதிகள் தொடர்பில் அறியாமையுடன் உள்ளமையால் புத்தாக்கமான தொழில்நுட்பத்தினூடாக கடந்த 20 ஆண்டுகளாக உயிர்களைக் காக்கும் எமது முயற்சிகளை முன்னெடுத்து வந்துள்ளோம். இலங்கை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு சமூகத்திற்கு மிகவும் தேவையாகக் காணப்பட்ட ஒரு முதலீடாக இது அமைந்துள்ளது”. 

“உலகளாவில் பிரசித்தி பெற்ற வர்த்தகநாமங்களின் மிகச் சிறந்த உபகரணங்கள் மற்றும் சேவைகளை இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மீது எமது அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டின் கவனம் அமைந்துள்ளதுடன், மாற்றமடைந்து வருகின்ற சர்வதேச மருத்துவ உலகிற்கு இணையாக எமது நாடும், மீள்புதுப்பிக்கப்பட்டு, மீள்கட்டமைப்புச் செய்யப்படுவதை உறுதி செய்வது மிகவும் அத்தியாவசியமாக அமைந்துள்ளது. இதன் மூலமாக சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்டு, சான்றுபடுத்தப்பட்ட உபகரணங்களின் துணையுடன் உலகத்தரம் வாய்ந்த சேவையை அனுபவிக்கும் வாய்ப்பை இலங்கையர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்”.

இலங்கை சனத்தொகையில் அண்ணளவாக 15மூ இனர் தூக்கத்தின் போது சுவாசக் கோளாறினால் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன. தூக்கத்தின் போது ஏற்படும் சுவாசக் கோளாறுகளில் பிரதானமானவற்றுள் ஒன்றாக தூக்கத்தின் போது ஏற்படும் மூச்சுத்திணறல் காணப்படுவதுடன், குறட்டையே இதன் பிரதான அறிகுறியாகும். வளர்ந்தவர்கள் மத்தியில் அண்ணளவாக 5 இற்கு 1 நபர் என்ற அடிப்படையில் தூக்கத்தின் போது ஏற்படும் கடுமையற்ற மூச்சுத்திணறலைக் கொண்டுள்ளதுடன், 15 இற்கு 1 நபர் என்ற அடிப்படையில் தூக்கத்தின் போது ஏற்படும் மிதமான அல்லது பாரதூரமான மூச்சுத்திணறலைக் கொண்டுள்ளனர். போதிய அறிவின்மையால் 95மூ இற்கும் அதிகமானோர் இதற்கு உரிய சிகிச்சையை பெற்றுக் கொள்வதில்லை.    

இந்த DREAMS Sleep Centre இனை ஆரம்பித்து அதன் மூலமாக வர்த்தகநாமத்தின் புதிய அணுகுமுறை தொடர்பில் கருத்துத் தெரிவித்த Technomedics நிறுவனத்தின் உயிர் மருத்துவப் பொறியியல் துறையின் பிரதிப் பொது முகாமையாளரான துமிந்த குணசேகர,

 “எப்போதும் விஸ்தரிப்படைந்து வருகின்ற மருத்துவத் துறைக்கு இணையாக எங்களையும் தரமுயர்த்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை Technomedics மிக அதிகமாக நம்புவதுடன், உலகெங்கிலுமிருந்து சுகாதாரப் பராமிப்பு நிபுணத்துவத்தையும், புரட்சிகரமான மருத்துவத் தொழில்நுட்பத்தையும் இலங்கைச் சந்தையில் அறிமுகப்படுத்துவதன் மீது கவனம் செலுத்தி வருகின்றோம். தூக்கம் தொடர்புபட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கையை இனங்கண்டுள்ள நாம், அத்தகைய வியாதிகளை கையாளுவதற்கு பிரத்தியேகமான மையமொன்றை ஆரம்பித்துள்ளோம்”. 

போதிய தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு DREAMS Sleep Centre பொருத்தமான தீர்வுகளை வழங்குவதுடன், Technomedics நிறுவனம் இலங்கையில் தனது சேவைத் தராதரங்களைப் பேணியவாறு, புரட்சிகரமான மருத்துவ மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஒப்பீட்டு நியமத்தின் தனிச்சிறப்பை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும். 

இலங்கையில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள DREAMS தூக்க தகவல் மையம் Resmed CPAP மற்றும் BIPAP சாதனங்கள் மற்றும் Devilbiss பிராண வாயு செறிவாக்க உபகரணம் ஆகிய இரு புதிய  உற்பத்திகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வு Technomedics நிறுவனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டியதாகவும் அமைந்துள்ளது. இலங்கையில் சுகாதாரப் பராமரிப்புச் சந்தையில் பல்வேறு சிறப்பம்சங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், LUSHசருமப் பராமரிப்பு நிலையம் போன்ற சேவைகள் அடங்கலாக விசாலமான உற்பத்தி வரிசையை வழங்கிவருகின்றது. 

இந்நிறுவனம் கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி மற்றும் காலி ஆகிய நகரங்களில் ஐந்து பிரத்தியேக மையங்களை நிறுவியுள்ளதுடன், 24 மணி நேர பிரத்தியேக விற்பனைக்குப் பிந்திய சேவையையும் கொண்டுள்ளது.