(நா.தினுஷா) 

கூட்டு எதிரணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதிப்பெற்ற அனுபவம் வாயந்த ஒருவர் இல்லையா? பரீட்சை மோசடி செய்த நாமல் ராஜபக்ஷ நாட்டின் முதல்வராக வேண்டுமா? என சுற்றுச் சூழல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய தேசியகட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இதைத் தெரிவித்த அவர்,

பொது எதிரணியினர் அடிமை மனநிலையில் செயற்பட்டு வருகின்றனர். நாட்டிற்கு பொறுத்தமான அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய  ஐக்கிய தேசிய கட்சியுடன் போட்டியிடக்கூடிய ஒருவரை பொது எதிரணியினர் தனது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.