அன்று மலையக மக்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் அச்சட்டத்திற்கு சார்பாக கையுயர்த்திய வடக்கு மாகாண தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகளின் ஈனச் செயல்களும் இருந்ததென டக்ளஸ் தெரிவித்துள்ளார்.இந்த பாவக் காரியத்தின் பின்னணியில், வடக்கு மாகாண மக்களின் பிரதிநிதியாக இருக்கின்ற நான் வெட்கப்பட வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதே அரசியல்வாதிகளின் குடும்ப வாரிசுகள் தான் இன்று தமது சுயலாப அரசியலுக்காக போலி தமிழ்த் தேசியத்தை தீவிரமாக உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

1931ஆம் ஆண்டின் டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், இம் மக்களும் இலங்கை பிரஜைகளாகவே கருதப்பட்டனர். எனினும், தொழில் ரீதியாக இம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டே வந்திருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபைகள் மற்றும் இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் தொடர்பிலான சட்டமூலங்கள் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.