(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

மலையக மக்களுக்கு குடிநீர் வசதிகளை பெற்றுக்கொடுக்க உலக வங்கியின் உதவியுடன் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக நீர்வழங்கள்  மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். 

பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

 

பெருந்தோட்ட பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளிலும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளில் ஏற்படும் மோசமான பாதிப்புக்கள் உள்ள நிலையில் அவற்றை நிவர்த்தி செய்ய அமைச்சர்  ஆரோக்கியமான திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளார். 

இந்திய வம்சாவளி மக்கள் காலம் காலமாக எதிர்கொள்ளும் இன்னல்களை  நிவர்த்தி செய்ய இவ்வாறான திட்டங்கள் கொண்டுவரப்படுவதை நாம் வரவேற்கின்றோம். மிகவும் கறைபடிந்த வரலாறுகளை கொண்ட மலையக மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த  கொண்டுவரும் மாற்று நடவடிக்கைகளை கையாண்டு அவர்களின் வாழ்க்கை தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.