பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்களை, பத்தரமுல்லை மற்றும்  மாளிகாவத்தையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புபிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை துரிதமாக வழங்கும் சேவை,  பத்தரமுல்லை பதிவாளர் நாயகம் அலுவலகத்தில்,  நேற்று முன் தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமைச்சர் வஜிர அபேவர்தன தலைமையில் இதற்காக இரண்டு விசேட கருமபீடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

 நாட்டின் எந்தவொரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்களை,  ஐந்து நிமிடங்களுக்குள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும்.

 1960 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட சான்றிதழ்களின் பிரதிகள், தரவுக் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்சமயம் 183 பிரதேச செயலகங்களில் இந்தச் சேவை வழங்கப்படுகிறது.

பத்தரமுல்லை பதிவாளர் நாயகம் அலுவலகத்திற்கு மேலதிகமாக,  கொழும்பு -  மாளிகாவத்தை உதவிப் பதிவாளர் நாயக அலுவலகத்தின் மத்திய ஆவணக் காப்பகத்திலும்,  இந்தச்  சேவையைப்  பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.