(இராஜதுரை ஹஷான்)

மஹிந்த தரப்பினருக்கும் அரசாங்க தரப்பினருக்கும் கட்சி கொள்கை  தொடர்பிலான கருத்து வேறுப்பாடுகளே காணப்படுகின்றனவே தவிர எவ்வித தனிப்பட்ட முரண்பாடுகளும் கிடையாது என தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க,

அரசாங்கத்தின் அனைத்து  சுகபோகங்களையும் அனுபவித்து தற்போது 16 எதிர்ப்பு குழு என்ற நாமத்தில் இருந்துக் கொண்டு செயற்படுபவர்களே தங்களது தனிப்பட்ட விடயங்களை மையப்படுத்தி இன்று அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்று  புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.