(ரொபட் அன்டனி)

காணாமல்போனோர் குறித்து ஆராயும் அலுவலகம் முன்வைத்துள்ள இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்ந்து தகுதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் யோசனை முன்வைக்க அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவை உபகுழுவில் மேலும் 10 அமைச்சர்கள்   நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைக்கும் யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அலுவலகம் கடந்த இடைக்கால அறிக்கையை கடந்த மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. 

இதில்   சட்ட ஏற்பாடுகள்  இழப்பீடுகள் காணாமல்போதல்கள்  எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள்   தொடர்பாக பல்வேறு பரிந்துரைகள்  முன்வைக்கப்பட்டன. நிதி உதவிகள், கடன்வசதிகள், வீடமைப்பு வசதிகள், கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவதல், தொழில்பயிற்சி  வழங்குதல், வாழ்வாதாரத்தை முன்னேற்றுதல், உட்பட  பல்வேறு பரிந்துரைகள் இந்த அலுவலகத்தினால் குறித்த அறிக்கை ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளன.