“நிரந்தர சமாதானத்தை நோக்கிய உலகம்” என்ற தலைப்பில் தென்கொரியாவில் சமாதான நிகழ்வொன்று  இடம்பெற்றுள்ளது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக வடகொரிய - தென்கொரிய தலைவர்களின் சந்திப்பினை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்த தருணத்தில் இந்த சமாதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

உலக தலைவர்கள், மத தலைவர்கள், சமூக தலைவர்கள் உட்பட உலகின் பல்வேறுபட்ட தரப்பை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

தென்கொரியாவின் இன்சியோன் ஆசியாட் மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொரியாவின் கலாச்சார பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

எச்.டபில்.யூ.பீ.எல். என்ற அமைப்பு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த நிகழ்வில் இடம்பெற்ற சமாதான அணி வகுப்பு நிகழ்ச்சி உலகம் எதிர்பார்க்கும் சமாதானம் குறித்த செய்தியை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இரு கொரியாக்களும் இணையவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் இடம்பெற்றுள்ள கலை நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உலகின்  39 நாடுகளை சேர்ந்த 97 நகரங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட இந்த சமாதான நிகழ்வு நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Picture gallery -  http://www.virakesari.lk/collections/339