இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன் அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த பொலிஸ்மா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டமைக்கு அமைய குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.