மூன்று வருடங்களுக்கான சொத்து விபரங்களை வெளியிடாத குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் துமிந்த சில்வா தனது சொத்து விபரங்களை  வெளியிடப்படவில்லை என  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேற்படி வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட போதே துமிந்த சில்வா தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் குற்றத்துக்கான தண்டனை எதிர்வரும் ஏப்ரல் 18 ஆம் திகதி வழங்கப்படும் நீதவான் தெரிவித்துள்ளார்.