இந்தியா பாக்கிஸ்தான் போட்டிகள் எப்போது கடும் அழுத்தங்களை  வழங்க கூடியவை என தெரிவித்துள்ள பாக்கிஸ்தான் அணியின் தலைவர் சப்பிராஸ் அகமட் நான் எனது வீரர்களிடம் இன்றையை போட்டியை மாத்திரமல்ல ஒவ்வொரு போட்டியையும் இந்தியாவிற்கு  எதிரான போட்டியாக  கருதுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடான இன்றைய போட்டி காரணமாக நாங்கள் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளோம், ஆனால் அது எங்களை பாதிப்பதற்கு நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இந்தியாவுடனான இன்றைய போட்டியை மற்றொரு போட்டியாக  கருத முயன்றாலும் இந்த போட்டி காரணமாக உருவாகியுள்ள அழுத்தங்கள் எதிர்பார்ப்புகள் வீரர்கள் மீது அழுத்தங்களை திணித்துள்ளன எனவும் பாக்கிஸ்தான் அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வீரர்கள் என்ற அடிப்படையில் இந்தியா பாக்கிஸ்தான் போட்டிகளை நாங்கள் சாதாரணமாகவே கருதுகின்றோம் ஆனால் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த போட்டி குறித்து காணப்படும் எதிர்பார்ப்பு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக வெற்றிபெறவேண்டும் என விரும்புகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.