வவுனியா - ஓமந்தை பாலமோட்டைப்பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், 

நேற்று முன்தினம் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் பாலமோட்டையில் நடவடிக்கை மேற்கொண்ட ஓமந்தைப் பொலிஸார் சட்டவிரோத கசிப்பு அரை லீற்றரை தனது உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக அப்பகுதியைச் சேர்ந்த 38வயதுடைய நபர் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

ஓமந்தை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வாவின் வழி நடத்தலில் ஜானக திசாநாயக்கா, நிஷாந்தனினால் கைது செய்யப்பட்டுள்ள நபர் நீண்டகாலமாக சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை கைப்பற்றப்பட்ட கசிப்புடன் நேற்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.