தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

19 Sep, 2018 | 03:44 PM
image

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோருவதுடன், தமது விடுதலைக்காக சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா இந்திரன் தங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இதற்கான தீர்மானம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, சிறி ரெலோ அமைப்பினர், தமிழ் விருட்சம் அமைப்பு, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா, ஈரோஸ் அமைப்பினர், சிகை அலங்கரிப்போர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு தமது கருத்து;களை வெளியிட்டனர். .

பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். இவர்களைப் பாராமுகமாக அரசாங்கம் நடத்தி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமது விடுதலைக்காகப் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளுக்கு சமூகத்தில் உள்ளவர்கள், ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டியது அவசியம். 

இந்த வகையிலேயே அரசியல் கட்சிகள் மற்றும் பொதுஅமைப்புக்ககள் சமூக முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி 22 ஆம் திகதி போராட்டம் நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் எதிர்வரும் 22 ஆம் திகதி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக இதற்கென அமைக்கப்பட்டுள்ள ஏற்பாட்டுக் குழவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41