அமெரிக்காவின் பிரபலமான டைம்ஸ் சஞ்சிகையை கோடீஸ்வர வர்த்தகரான மார்க் பெனியோவ் கொள்வனவு செய்துள்ளார்.

1999 இல் சேல்ஸ்போர்ஸ் எனப்படும் கிளவுட் டெக்னோலஜி என்ற நிறுவனத்தை வாங்கியதன் மூலம் பிரபலமானவர்  மார்க் பெனியோவ்.

அவர் தற்போதும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் தலைவராகவும் உள்ளார்.

குறித்த நிறுவனம் கடந்த 2017 இல் 8 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே இவர் டைம்ஸ் சஞ்சிகையை மெரெடித் குழுமத்திடமிருந்து 190  மில்லியன் டொலருக்கு கொள்வளவு செய்துள்ளார்.

இது முதலீடு மாத்திரமே நாங்கள் டைம்ஸின் நாளாந்த நடவடிக்கைகளில் தலையிட மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் மிகப்பெரும் தாக்கத்தை செலுத்திவரும் நிறுவனத்தில் முதலீடு செய்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெனியோவின் சொத்து 6.6 பில்லியன் என போர்ப்ஸ் சஞ்சிகை  மதிப்பிட்டுள்ளது.

மேலும் பெனியோவ் ஒரகில் நிறுவனத்தில் முன்னர் பணியாற்றியுள்ளதுடன் தனவந்தராகவும் விளங்குகின்றார்.

உலகின் பல தொழில்நுட்பங்களை சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஊடக நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நிலையிலேயே பெனியோவ் தற்போது டைம்ஸ் சஞ்சிகையை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.