லண்டனில் மசூதிக்கு அருகில் கார்தாக்குதல்

Published By: Rajeeban

19 Sep, 2018 | 03:05 PM
image

லண்டனின் வடமேற்கு பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் பொதுமக்கள் மீது காரொன்று மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

பிரென்ட் என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

காரில் காணப்பட்ட மூன்று ஆண்களும் பெண்ணொருவரும் இஸ்லாமிய சமூகத்தவர்களிற்கு எதிராக கோசங்களை எழுப்பிய பின்னர் காரால் பொதுமக்கள் மீது மோதினர் என தகவல்கள் வெளியாகின்றன.

அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் சிக்கிய மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை பயங்கரவாதம் என்ற கோணத்தில் விசாரணை செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள  காவல்துறையினர் வெறுப்புணர்வினால் இடம்பெற்ற குற்றச்செயல் என்ற கோணத்தில் விசாரணை செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறிப்பிட்ட சமயத்தில் மசூதியில் விரிவுரையொன்றை ஏற்பாடு செய்திருந்த  இஸ்லாமிய அமைப்பொன்று இது இஸ்லாமிய வெறுப்புணர்வை மையமாக கொண்ட தாக்குதல் என குறிப்பிட்டுள்ளது.

சிவப்பு நிற வாகனமொன்று பொதுமக்களை நோக்கி திரும்பிவந்து அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது ,இந்த தாக்குதலிற்கு முன்னதாக இஸ்லாமிய எதிர்ப்பு கோசங்களை எழுப்பியுள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்லாமிய அமைப்பு துணிச்சல் மிகுந்த தொண்டர்கள் சிலர் காரை தடுக்க முயன்றதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

காரில் காணப்பட்டவர்கள் அருகில் உள்ள பகுதியொன்றில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்தனர் அதன் பின்னர் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதன் காரணமாக சீற்றமடைந்தே அவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52