வரவு - செலவுத் திட்ட யோசனை எதிர்வரும் எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி முன்வைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி முன்வைக்கப்பட்டு டிசம்பர் 08 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் எதிர்க் கட்சியினால் இந்த நாட்கள் போதாது என தெரிவிக்கப்பட்ட கருத்தை கருத்தில் கொண்டு, வரவு - செலவுத் திட்ட யோசனையை நவம்பர் 5 ஆம் திகதிக்கு மாற்றம் செய்வதற்கு அரசாங்க தரப்பு எம்.பி.க்கள் குழு தீர்மானித்துள்ளது.

 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற அரசாங்க தரப்பு எம்.பி.க்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித் சேனாரத்தன தெரிவித்துள்ளார்.