20. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சார கேட் (e-Gates system)கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 65 ஆவது விடயம்)

தற்பொழுது குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் விமான நிலையத்தில் வழங்கப்படும் சேவைக்கு மாற்றாக மின்சார கேட் (e-Gates system) கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதன் மூலம் விமான நிலையத்தில் வருகை மற்றும் வெளியேறும் செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கமைவாக 260 மில்லியன் ரூபா முதலீட்டுடன் 10 மின்சார கேட் (e-Gates system) கட்டமைப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ். பி. நாவின்ன அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. இங்குராக்கொட தேசிய தொழில் பயிற்சி நிலையத்தை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 67 ஆவது விடயம்)

கிராம இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு உதவக்கூடிய ஆற்றலை பெற்றுக்கொடுப்பதற்காக தேசியமட்டத்திலான தொழிற்பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை இங்குராக்கொடையில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை 35 மில்லியன் ஈரோக்களுக்கு நெதர்லாந்தின் (M/S Gemco International BV) நிறுவனத்திற்கு வழங்குவதற்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆய்வு, திறனாற்றல் அபிவிருத்தி, மற்றும் தொழில்பயிற்சி மற்றும் மலையக உரிமை தொடர்பான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம  சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் விநியோகம் மற்றும் இயற்கை கழிவறை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அடிப்படை வசதி அபிவிருத்தி (நிகழ்ச்சி நிரலில் 70 ஆவது விடயம்)

யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் விநியோகம் மற்றும் இயற்கை கழிவறை வசதி திட்டத்தின் கீழ் நல்லூர், கட்டுடை, வட்டுக்கோட்டை, புங்குடுதீவு. காரைநகர். நாவற்குழி. புத்தூர். பூநகரி. மீசாலை. கொடிகாமம். பளை, கரவெட்டி, பூநரி. பொக்கனி, நாவற்குழி, கட்டுடை, மற்றும் வேலணை ஆகிய பிரதேசங்களுக்கு நீரை விநியோகிப்பதற்கான கட்டமைப்பை அமைத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைய ஆளு ளு நைசசய ஊழளெவசரஉவழைn (Pஏவு) டுவன என்ற நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம்  சமர்ப்பித்த ஆவணத்துககுக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. கொழும்பு 2 யூனியன் பிளேஸ் முதலிகே மாவத்தையில் அமைந்துள்ள காணியொன்றை வரையறுக்கப்பட்ட எக்ஸஸ் ரியல்டீஸ் தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 73 ஆவது விடயம்)

அபிவிருத்தி திட்டத்துக்காக பயன்படுத்துவதற்கென கொழும்பு 2 யூனியன் பிளேஸ் முதலிகே மாவத்தையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட 114.56 பேர்ச்சஸ் காணியை சம்பந்தப்பட்ட கொள்வனவு தொடர்பில் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின் சிபாரிசுக்கு அமைய 1017.20 மில்லின் ரூபாவுக்கு வரையறுக்கப்பட்ட எக்ஸஸ் ரியல்டீஸ் (தனியார்) என்ற நிறுவனத்துக்கு 99 வருட கால குத்தகைக்கு வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க  சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது,

24. இடர் அனர்ததத்துடனான பிரதேசங்களில் குடியிருக்கும் மக்களுக்கு Proquest வீடுகளை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 75 ஆவது விடயம்)

மண் சரிவு ஏற்படக் கூடிய கூடுதலான அனர்த்தத்துடனான பிரதேசங்களில் வாழும் குடும்பங்களை மீள குடியமர்த்துவதற்காக Proquest 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக சீன ரெயில்வே பீஜிங் பொறியியலாளர்களின் குரூப் கம்பனி வறையறுக்கப்பட்ட யப்கா நிர்மாணிக்கும் தனியார் நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தகளை மேற்கொள்வதற்கும் இதன் முதல் கட்டத்தின் கீழ் 2530.5 மில்லியன் ரூபா முதலீட்டுடன் இரத்தினபுரி மற்றும் களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் 1170 வீடுகள் நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக நீர்ப்பாசன நீரியல்வள இடர்முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25. கொகுவல, கெட்டம்பே மற்றும் ஹீறுஸ்சகல மேம்பாலங்களை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 77 ஆவது விடயம்)

அங்கேரிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 58.68 மில்லியன் யூரோக்கள் முதலீட்டுடன் கொகுவல, கெட்டம்பே மற்றும் ஹீறுஸ்சகல ஆகிய இடங்களில் 3 மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக அங்கேரிய அரசாங்கத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள டீநவழரெவநிவைழ Pடஉ என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை வழங்கி; நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

26. தெற்கு வீதியுடன் தொடர்புடனான திட்டத்தின் கீழ் வீதி புனரமைப்பு மற்றும் மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 78 ஆவது விடயம்)

தெற்கு வீதியுடன் தொடர்புபட்ட திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள திட்டத்தை பூர்த்தி செய்த பின்னர் மேலும் நிர்மாணிப்பதற்காக எதிர்பார்க்கப்படும் கிடைக்கப்பெறும் நிதியத்தைப் பயன்படுத்தி கொழும்பு, இரத்தினபுரி வீதியில் ஹோமாகமையிலிருந்து பனாகொடை வரையிலான 1.9 கிலோ மீற்றர் தூர வீதிப் பிரிவும் கொழும்பு இரத்தினபுரி வீதியில் பனாகொடையிலிருந்து கொடகமை சந்தி வரையிலான 2.16 கிலோ மீற்றர் தூரப் பகுதியும், பாமன்கடை ஹொரணை வீதியில் டபிள்யு ஏ டி சில்வா மாவத்தையிலிருந்து பாமன்கடை வரையிலான 0.5 கிலோ மீற்றர் வீதியும் பாமன்கடை ஹொரணை வீதியில் பிலியந்தலை நகரில் 2.95 வீதியுமாக நான்கு வீதிப் பிரிவுகளை புனரமைத்தல் மேம்படுத்துவதற்காக ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

27. மதவாச்சி. ஹொரவப்பொத்தானை வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 79 ஆவது விடயம்)

வடக்கு வீதியுடன் இணைந்த திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த திட்ட செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் மேலும் எஞ்சியுள்ள நிதியைப் பயன்படுத்தி மதவாச்சி ஹொரவப்பொத்தானை வீதியில் 10 கிலோ மீற்றர் தொடக்கம் 37.8 கிலோ மீற்றர் வரையிலான வீதியில் 27.8 கிலோ மீற்றர் வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம்  சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

28. இலங்கை பொலிஸாருக்கு சீருடைக்கான துணியைக் கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 82 ஆவது விடயம்)

இலங்கை பொலிஸ் சேவையில் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரின் உத்தியோகபூர்வ சீருடைக்குத் தேவையான சீருடை துணி மீற்றர் ஒன்றை 346 ரூபா வீதம் 4 இலட்சம் மீற்றர் துணியை வென்காட் இன்டஸ்டீஸ் பிரேவேட் லிமிட்டெட்டிடமும் ஒரு இலட்சம் மீற்றர் துணியை கிரேட் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் பிரேவேட் லிமிட்டெட்டிமும் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்காக அரச நிறுவாகம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

29. இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 85 ஆவது விடயம்)

தெளிவுபடுத்துவதன் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழலை தவிர்த்தல் தடுத்தல் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எண்ணக்கருவுக்கு அமைவான நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான பல்வேறு திட்டங்களை அரச பங்களிப்பின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் மூலம் நாட்டு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை மேற்கொள்வதற்கான செயலமர்வும் வகுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்த வேலைத் திட்டத்தை 2019 தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்குத் தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்கும் மேதகு ஜனாதிபதி சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

30. திரிபிடகயை தேசிய உரிமை ரீதியில் பிரகடனப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 86 வது விடயம்)

சம்புத்த போதனைகள் அனைத்தையும் உள்ளடக்கிய திரிபிடகை தொடர்பில் மீள் பதிவு மற்றும் ஏனைய பணிகளை புத்தசாசன அமைச்சின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்வதற்காக மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பௌத்த மத அலுவல்கள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஒன்றிணைந்து கூட்டாக முன்வைத்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

31. 2019 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்ட மூலம் (நிகழ்ச்சி நிரலில் 87 ஆவது விடயம்)

2019 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்காக ஒதுக்கீட்டு திருத்த சட்ட மூலம் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2019 – 2021 இடைக்கால வரவு செலவு திட்ட கட்டமைப்பின் கீழ் 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டும் தற்போது உள்ள வளங்களை கவனத்தில் கொண்டும் இந்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டு திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

32. 500 மெகா வோட் (MW) இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மானித்தல் (நிகழ்ச்சி நிரலில் 91 ஆவது விடயம்)

இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய அரசாங்கத்துக்கு உட்பட்ட நிறுவனமான NTPC  நிறுவனத்தின் மூலம் கூட்டாக கெரவலப்பிட்டியில் அமைக்கப்படவுள்ள 500 மெவோட் இயற்கை எரிவாயு அனல் மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான கூட்டுத்திட்டம் மற்றும் பங்குத்தாரர்களின் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

33. அமெரிக்காவின் மிலேனியம் செலேஞ் கோப்ரேசன் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையிலான ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் 92 ஆவது விடயம்)

மிலேனியம் செலேஞ்ச் நிதியுதவி வேலைத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் மத்தியில் போக்குவரத்து மற்றும் காணி போன்ற துறைகளில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மிலேனியம் செலேஞ்ச் எக்கவுன்ட் (கரன்டி) இலங்கை லிமிட்டெட் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கும் அதற்குத் தேவையான ஏனைய வசதிகளை செய்வதற்கும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும்  ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.