இதுவே எமது தோல்விக்கான காரணம் ; மனம் திறந்தார் மெத்தியூஸ்

Published By: Vishnu

19 Sep, 2018 | 01:18 PM
image

அழுத்தங்களை எவ்வாறு கையாள்வது தொடர்பிலும் சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பிலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் இன்னும் பல உள்ளன என இலங்கை கிரிக்கெட் அணியின்  தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார்.

14 ஆவது ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரை எதிர்கொள்வதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் சென்றுள்ள இலங்கை அணியானது நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் படு தோல்வியை சந்தித்தது.

இதில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியின் பின்னர் ஊடகங்களை சந்தித்து  உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்த மெத்தியூஸ்,

திறமை குறித்து எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. எம்மிடம் திறமை இருக்கின்றது என்பதை தென்னாபிரிக்காவுடனான தொடரின்போது நாம் வெளிப்படுத்தக் காட்டினோம். 

ஆனால் அழுத்தங்களை எவ்வாறு சமாளிப்பது. சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பவை பற்றியே நாம் அதிக கவனம் செலத்த வேண்டும். இம்முறை இவை இரண்டியும் நங்கள் உரியவாறு வெளிப்படுத்தாமையே தோல்விக்கான பிரதான காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். 

உறுதியான மனோநிலை வேண்டும். அதற்கு விரைவாக தீர்வுகாண வேண்டும். இப்படியே நகர முடியாது. இன்னும் இரண்டு வாரங்களில் இங்கிலாந்தை எமது சொந்த மண்ணில் எதிர்கொள்ளவுள்ளோம்.

இந் நிலையில் இவ்வாறான மோசமான ஆட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20