இஸ்ரேலில் வரலாற்றுக்கு முந்திய காலக்குகையொன்றிலிருந்து 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான ஆலையை கண்டறிந்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த குகைப் பகுதியில் நடோடிகளாக வாழ்ந்த வேட்டை ஆடுபவர்களின் இறந்த உடல்களை அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருக்கும்போதே இந்த மதுபான ஆலையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக  ஆய்வுக்குழுவை தலைமை தாங்கி வழிநடத்திய ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவிக்கையில்,

உலகிலேயே மனிதர்கள் தயாரித்த மிக பழமையான சாராயத்தை இந்த கண்டுபிடிப்பு பதிவு செய்துள்ளது.

பழைய கற்காலம் முதல் புதிய கற்காலத்திற்கு இடையில் வாழ்ந்த நாத்தூஃபியன் கால மக்கள் எந்த தாவரங்களின் உணவுகளை உண்டு வந்தார்கள் என்பதற்கான தரவுகளை ஆராய்ந்ததாகவும், கோதுமை மற்றும் பார்லியை கொண்டு தாயரிக்கப்பட்ட சாராயத்தின் சுவடுகளை கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குகையின் தரையில் 60 சென்றி மீற்றர் ஆழமுடையதாக செய்யப்பட்டிருந்த கல்லால் ஆன கலவைக் குழிகளில் இந்த சுவடுகள் தென்பட்டதடாகவும் ஓட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் சணல் போன்ற இழை நார்கள் உள்பட பல்வேறு செடி வகைகளை சேமிக்கவும், தூளாக்கவும் இந்த குழிகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் கஞ்சி, அல்லது கூழ் போன்று இருக்கும் அக் காலத்து மது நாம் இன்று அறிந்திருக்கும் பியரிலிருந்து வேறுட்டதெனவும் தாங்கள் கண்டறிந்த எச்சத்தோடு ஒப்பிடும் வகையில், முற்கால மது தயாரிக்கும் முறையை உருவாக்கி செய்து காட்டியதில் இந்த ஆய்வுக் குழு வெற்றிபெற்றுள்ளது.

முதலில் தானியத்தை மாவாக்கி, பின்னர் வெந்நீர் மாவு குழையலை ஈஸ்ட் கொண்டு புளிக்க செய்வதன் மூலம் அவர்கள் இதனை செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.