இந்தியாவின் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டியில் பெண் குழந்தையை கருவிலேயே கலைப்புச்செய்த 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

குறித்த பெண்ணிற்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் ஆண் குழந்தைக்கு ஆசை பட்டு 4ஆவது முறையாகவும் கருவை சுமந்துள்ளார்.

7 மாத கர்ப்பிணியான  குறித்த பெண்ண தான் சுமப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என ஸ்கேன் செய்து பார்த்த போது 4ஆவது முறையாகவும் தான் சுமப்பது பெண் குழந்தை என தெரிய வரவே கருவை கலைக்க வைத்தியரை நாடியவருக்கு கிடைத்தது ஏமாற்றமே. 

இறுதியில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் தாதி ஒருவரை நாடியுள்ளார். அத் தாதியும் வீட்டிலேயே குறித்த பெண்ணிற்கு கருக்கலைப்பிற்கு சிகிச்சையளித்து வந்துள்ளார். இந் நிலையில் இன்று கருக்கலைப்பிற்காக சென்ற குறித்த பெண் சிகிச்சையின் பேதே உயிரிழந்துள்ளார்.

கர்ப்பிணி பெண் உயிரிழந்ததையடுத்து உறவினர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் சட்டவிரோத கருக்கலைப்பின் மூலம் இரு உயிர்களை காவுகொண்ட குறித்த தாதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆண் குழந்தை மீதான ஆசையால் 7 மாத கருவை கலைக்கச் சென்று 3 பெண் பிள்ளைகளை தாயில்லாமல் அநாதையாக தவித்து நிற்பதாக உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.