கல்லீரல் கணைய பாதிப்படைந்துள்ளமைக்கான அறிகுறிகள் முன்னதாக தெரிய வருவதில்லை என கல்லீரல் - கணைய பாதிப்பு சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்லீரல் - கணைய பாதிப்புக்களுக்கு வாழ்க்கை முறையே பிரதான காரணமாக அமைகிறது என்கிறார்கள் வைத்தியர்கள்.

இரத்தத்தில் கொழுப்புச் சத்து சேருதல் மதுப்பழக்கம் புகைப்பழக்கம் ஹெபடைடிஸ் ஏ. பி. சி. வைரஸ் தாக்குதல் போன்றவற்றின் காரணமாக கல்லீரல் கணையத்தில் பாதிப்புக்கள் ஏற்படுகிறது.

குறிப்பாக கல்லீரலில் கொழுப்புச் சத்து சேர்வதால் கல்லீரல் சுருக்க  நோய் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.

கல்லீரல் - கணைய பாதிப்புக்கள் ஏற்படும் நிலையில் அறிகுறிகள் முன்கூட்டியே வெளிப்படாத காரணத்தினால் நோய் முற்றிய நிலையிலேயே பாதிப்படைந்தவர்கள் சிகிச்சைக்கு செல்வதால் சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.