அமெரிக்காவில் போதை மருந்துகளை உபயோகித்து 100 பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த எலும்பு முறிவு வைத்தியர் அவரது காதலியுடன் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள நியூபோர்ட் பீச் நகரை சேர்ந்த 38 வயதான கிரேன்ட் வில்லியம் ரோபிசியஸ். என்பவர் எலும்பு முறிவு சிகிச்சை வைத்தியராவார். இவரது காதலி செரிசா லாரா ரிலே 

இவர்கள் இருவரும் மதுப்பிரியர்கள். மதுபான சாலைகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டவர்கள்.. அங்கு வரும் அழகிய பெண்களை பேச்சின் மூலம் வசியம் செய்து அவர்களுடன் ரோபிசியஸ் நட்புறவை ஏற்படுத்துவார். பின்னர் அவர்களுக்கு கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகளை வழங்கி பாலியல் துஸ்பிரயோகப்படுத்தி வந்தார்.

இதற்கு அவரது காதலி ரிலே உடந்தையாக இருந்தார். இந்தநிலையில் அவரால் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட 2 பெண்கள் பொலிஸில் புகார் செய்தனர். அதில் ரோபிசியஸ் தங்களை விருந்துக்கு அழைத்து போதைபொருள் வழங்கியதாகவும், நியூபோர்ட் பீச்சில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் புகார் செய்தனர்.

எனவே, ரோபிசியசையும், அவரது காதலி ரிலேவையும் ஆரஞ்கவுண்டி பொலிஸார் கைது செய்தனர். பின்னர் ரோபிசியஸின் தொலைபேசியை சோதனை செய்தபோது 100 க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இருந்தன.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரிகள் பேட்டி அளித்த போது ரோபிசியசால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வந்து புகார் செய்யலாம். அவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவித்தனர். அதையடுத்து அவர் போதை மருந்து கொடுத்து பாலியல் துஸ்பிரயோகப்படுத்தியதாக 100 க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரோபியசியசுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். அவரது காதலி ரிலேவுக்கு 30 ஆண்டு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.