வவுனியா மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் மூன்று காரணங்களை முன்வைத்து நேற்று பகல் முதல் கால வரையறையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா புதிய பஸ் நிலையத்தினுள் வெளிமாவட்ட பஸ்கள் உட்செல்வதினை தடை செய்ய வேண்டும் , புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக வெளிமாவட்ட பஸ்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதை தடை செய்ய வேண்டும் , இணைந்த நேர அட்டவணையினை உடனே அமுல்படுத்த வேண்டும் 

என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து வெளிமாகாணங்களுக்கு செல்லும் தனியார் பஸ் ஊழியர்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும் இன்றைய தினம் அனைத்து மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பஸ் ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றையதினம் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தலமையிலான குழுவினர் தனியார் பஸ் ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போதிலும் அது பயனளிக்கவில்லை

வெளி மாவட்டங்களிலிருந்து இலங்கை போக்குவரத்து சபையினர் பஸ்களை வரவழைத்து சேவையில் ஈடுபடுத்தியுள்ள போதிலும் குறித்த பஸ்கள் வவுனியாவிலிருந்து வெளி மாவட்டங்களுக்கே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.