ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை நாளந்தம் தொடர்ந்து விசாரணை செய்வதற்கு விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ம் திகதி முதல் குறித்த வழக்கை நாளந்தம் விசாரணை செய்ய விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.