(நா.தினுஷா) 

பஸ் கட்டணத்திற்கான விலைச் சூத்திரமொன்றினை தயாரிப்பது தொடர்பில் இன்று போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடலொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ண தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு ஏற்ப எரிப்பொருட்களின் விலையில் ஒவ்வொரு மாதமும் மாற்றம் ஏற்ப்படுமாயின் விலை அதிகரிப்புக்கு ஏற்றாற்போன்று தனியார் பஸ் கட்டணங்களிலும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். வருமானத்தை எதிர்பார்ப்பதைப்போன்று தனியார் பஸ் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுபவர்களின் நலன் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். 

விலை சூத்திரத்திற்கு ஏற்ற கட்டண சூத்திரம் இல்லாமையால்  சேவைகளில் பாரிய பிரச்சினைகளும் தோற்றம் பெற்றுள்ளன. இதனால் பயணிகளும் அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர். இந்த பிரச்சினைகளை சீர் செய்ய வேண்டுமானால் எரிபொருள் விலை சூத்திர மாற்றத்துக்கு ஏற்ற வகையிலான கட்டண கூத்திரமொன்றும் அவசியமாக காணப்படுகின்றது. 

இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டும் தீர்வுகள் எதுவும் கிடைக்க  வில்லை. அகவே நாளைய தினம் இது தொடர்பில் போக்குவாரத்து அமைச்சுடன் கலந்துரையாடலொன்றினை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.