முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தால் அவரிற்கு மேலதிக பாதுகாப்பினை வழங்குவதற்கு தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ தனது உயிருக்கு ஆபத்து என கருதினால் அவர் தனக்கு பாதுகாப்பை கோரலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பொது எதிரணிக்குள் உருவாகியுள்ள மோதல்கள் காரணமாக நாங்கள்  கோத்தபாய ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பை வழங்கவேண்டியிருக்கும் என்பது எனக்கு தெரியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது பொதுவேட்பாளரின் பாதுகாப்பு நீக்கப்பட்டவேளை அமைதியாகயிருந்த  தற்போது எதிரணியில்  உள்ள உறுப்பினர்கள் தற்போது ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து கவலையடைவது குறித்து ஆச்சரியமடைந்துள்ளேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் நானும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளிற்கு பின்னர் சி.ஐ.டி.யினர் விபரங்களை வெளியிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ள பிரதமர் விசாரணைகள் இடம்பெறுவதால் தற்போது தகவல்களை வெளியிட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.