கோழி உற்பத்தி துறையின் நிகழ்கால நிலைமை மற்றும் எதிர்காலம் தொடர்பாக ஆழமாக கலந்துரையாடப்படும் 2018 ஆம் ஆண்டுக்கான கருத்தரங்கு செப்டம்பர் 28ம் திகதி பதுளை ஊவா வெல்லச பல்கலைக்கழத்தில் நடைபெறவிருக்கின்றது.

கோழி இறைச்சி உற்பத்திக்கான உலகில் சுற்றாடலுக்கு சார்பான மற்றும் செயற்திறன் கொண்ட நடவடிக்கை“Future of the Poultry World: Smarter and Greener Production”என்ற தொனிப்பொருளின் கீழ் இரண்டாவது தடவையாகவும் நடைபெறவுள்ள இந்த கருத்தரங்குக்கு இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனமான கிறிஸ்ப்றோ அனுசரணை வழங்குகின்றது.

ஊவா வெல்லச பல்கலைக்கழத்தின் கால்நடை விஞ்ஞான பீடத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்ற இந்த கருத்தரங்குக்கு இலங்கை பல்கலைக்கழகங்களின் விவசாய பீடத்தை சேர்ந்த கல்விமான்கள், பட்டம் பெற எதிர்பார்பவர்கள்,ஆய்வு நிறுவனங்களின் கல்விமான்கள் அடங்கலாக பலர் கலந்து கொள்ளவுள்ளனர். 

துறையின் முக்கிய பிரிவுகளின் கீழ் கோழி தீனி,கோழிகளுக்கு பரவும் நோய்கள்,உற்பத்தி கட்டமைப்பு மற்றும் துறைசார்ந்த புதிய ஆய்வு தொடர்பாக விசேட விரிவுரைகள் புகழ்பெற்ற கல்விமான்களால் முன்வைக்கப்படவுள்ளது.

இலங்கையில் கோழி இறைச்சி உற்பத்தி துறையின் மேம்பாட்டுக்காக ஊவ வெல்லச பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலும்,துறையின் முன்னணி நிறுவனமான தாம் அதற்கான பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்திலுமே கிறிஸ்ப்றோ நிறுவன குழுமம் 2018 ஆம் ஆண்டு கருத்தரங்குக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளமைக்கு காரணங்களாகும்.

கிறிஸ்ப்றோ உற்பத்தி செயற்பாடுகளின் பெரும்பாலானவை சூழலுக்கு தீங்கிழைக்காத வகையிலேயே தற்போது

முன்னெடுக்கப்படுகின்றது. இதுதவிர எரிபொருள் பாதுகாப்பு, சூழல் மாசுபடுவதை குறைத்தல்,பொருளாதார நிலைத்தன்மை ஆகியன தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றது. “பண்ணையிலிருந்து கரண்டி வரை”(Farm to Fork)என்ற நிறுவன எண்ணத்துக்கமைய உலகில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழுமையான உற்பத்தி செயற்பாடுகளை கணினி மயப்படுத்தி உயர்தரம், புத்துணர்வு, போஷாக்கு மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தியே தமது உற்பத்திகளை முன்னெடுக்கின்றது.

கோழி உற்பத்தி துறையில் ISO 14001 தரச் சான்றிதழுடன் மேலும் 6 சான்றிதழ்களை கொண்ட ஒரே நிறுவனம்

கிறிஸ்ப்றோ ஆகும். அத்துடன் தமது வர்த்தக நாமத்தின் கீழ் கோழி உற்பத்திகள் பலவற்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இற்றைக்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்ப்றோ நிறுவனத்தில்

இன்று1,100இற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 6 நிறுவனங்களை கொண்ட ஒரு பாரிய குழுமமாக உள்ளது. 

நாடு முழுவதும் 17 இடங்களில் தமது உற்பத்திளை மேற்கொள்ளும் இலங்கையின் பெரிய கோழி உற்பத்தி குழுமம் கிறிஸ்ப்றோ என்பதும் குறிப்பிடத்தக்கது.