ஓமந்தை பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவயை அமைக்குமாறு வலியுறுத்தி அப் பகுதி மக்கள் இன்றைய தினம் புகையிரத பாதையை மறித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பாதுகாப்பு அற்ற புகையிரத கடவையில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்தோடு மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

ஆகவே குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவையை அமைக்குமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.