எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள்

Published By: Daya

19 Sep, 2018 | 10:23 AM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் சுருக்குவலைக்கு அனுமதி வழங்கியமையினை தடை செய்வதோடு மாவட்டத்தில் பணியாற்றும் சர்ச்சைக்குரிய 3 உத்தியோகத்தர்களையும் உடன் மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் மாவட்ட மீனவ அமைப்புக்கள் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை நேற்றைய தினம் சந்தித்தனர்.

குறித்த இரு கோரிக்கைகளுடன் மாவட்டத்தின் 10 பிரதிநிதிகள் குறித்த சந்திப்பில் ஈடுபட்டதனையடுத்து குறித்த கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்த கூட்டமைப்பின் தலைவர் உடனடியாகவே கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்றொழில் அமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு நிலமையை விளக்கி கூறியதோடு ஊழியர்களை மாற்றுமாறு பணிப்பாளர் நாயகத்திடமும் மீண்டும் இரகசியமான முறையில் வழங்கிய அனுமதியினை இரத்து செய்யுமாறு அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்ததோடு குறித்த விடயத்திற்கான தீர்வினை உடன் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

அதன் பிரகாரம் கூட்டமைப்பின் தலைவரின் ஏற்பாட்டில் நேற்று மாலையே கடற்றொழில் நீரியல்வளத் துறையின் பணிப்பாளர் நாயகத்துடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன் அடிப்படையில் மாவட்டத்தின் உதவிப் பணிப்பாளர் , பரிசோதகர் மற்றும் சாரதி ஆகிய மூவரையும் உடனடியாக ஒக்ரோபர் முதலாம் திகதியுடன் மாற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து வழங்கப்பட்ட அனுமதியை இரத்துச் செய்வது தொடர்பில் மீன்பிடி அமைச்சருடனான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் பேதுருப்பிள்ளை - பேரின்பநாதனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராசா , சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த முயற்சியில் கூட்டமைப்பின் தலைவரினால் கூறிய கூற்றின் பிரகாரம் தற்போது பணிப்பாளர் நாயகம் உறுதியளித்துள்ளார். 

இதேபோன்று அமைச்சரை சந்திப்பதற்கான ஏற்பாட்டினையும் மேற்கொண்டுள்ளனர். குறித்த சந்திப்பின் பின்னரே நூறுவீதமான முடிவினையும் எட்டமுடியும்.

இருப்பினும் குறித்த முயற்சி பெரும் வெற்றியளித்துள்ளது என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19